Praise the This is a new venture for me. The Word of God is a profound source of goodness, offering believers guidance, comfort, and wisdom. It is described as a lamp to our feet and a light to our path (Psalm 119:105), illuminating the way through life's challenges and uncertainties. The Scriptures are not just ancient texts; they are living and active, sharper than any double-edged sword (Hebrews 4:12), capable of transforming hearts and minds. The goodness of God's Word is evident in its ability to teach, rebuke, correct, and train in righteousness (2 Timothy 3:16-17). It equips us for every good work, ensuring that we are prepared to face the world with faith and integrity. The Word of God is also a source of truth and sanctification, as Jesus prayed, "Sanctify them by the truth; your word is truth" (John 17:17). Moreover, the Word of God provides comfort and hope. Psalm 34:8 invites us to "taste and see that the Lord is good; blessed is the one who takes refuge in him." This verse encourages us to experience God's goodness personally, finding refuge and strength in His promises. The Scriptures remind us of God's enduring love and faithfulness, as read in Psalm 100:5: "For the Lord is good and his love endures forever; his faithfulness continues through all generations." Essentially, the Word of God is a testament to His unwavering goodness, offering a foundation of hope, guidance, and eternal truth for all who seek Him. I experienced it... and the result is this 'The Word & Me' website. May His everlasting mighty Name alone be glorified...! |
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். எனக்கு இது ஒரு புதிய முயற்சி. விசுவாசிகளுக்கு வழிகாட்டுதல், ஆறுதல், ஞானம் ஆகியவற்றை வழங்கும் கடவுளுடைய வார்த்தை நன்மையின் ஆழமான ஆதாரமாகும். இது நம் கால்களுக்கு ஒரு விளக்காகவும், நம் பாதைக்கு ஒரு வெளிச்சமாகவும் இருக்கிறது (சங்கீதம் 119:105). வாழ்க்கையின் சவால்கள் மற்றும் நிச்சயமற்ற நிலைகளின் வழிகளுக்கு வெளிச்சமாய் இருக்கிறது. வேத வார்த்தைகள் என்பது வெறும் பழங்கதை அல்ல; அவைகள் இன்றளவும் ஜீவனோடு உயிர்ப்புடன் இருக்கின்றன, எந்த இருபுறமும் முனைகள் கொண்ட பட்டயத்தை விட கூர்மையானவைகளாகவும் (எபிரேயர் 4:12), இருதயங்களையும் மனதையும் மாற்றும் திறன் கொண்டவைகளாகவும் இருக்கின்றன. தேவனுடைய வார்த்தை, நமக்கு நற்குணம், நீதியைப் போதிப்பது, கண்டிப்பது, திருத்துவது மற்றும் பயிற்றுவிப்பது போன்றவற்றில் வெளிப்படுகிறது (2 தீமோத்தேயு 3:16-17). தேவ வார்த்தைகளானது நாம் தேவன் பேரில் விசுவாசத்துடனும் நேர்மையுடனும் உலகை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என்பதை உறுதிசெய்து, ஒவ்வொரு நல்ல வேலைக்கும் அது நம்மை ஆயத்தமாய் இருக்கச் செய்கிறது. “உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்; உம்முடைய வசனமே சத்தியம்.” என்று நம்முடைய ஆண்டவர் யோவான் 17:17ல் ஜெபித்தபடி, தேவ வார்த்தையானது சத்தியத்திற்கும் பரிசுத்தத்திற்கும் ஆதாரமாக இருக்கிறது. மேலும், கடவுளுடைய வார்த்தை ஆறுதலையும் நம்பிக்கையையும் அளிக்கிறது. சங்கீதம் 34:8 “கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்; அவர்மேல் நம்பிக்கையாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று அறைகூவி நம்மை அழைக்கிறது. இந்த வசனம், கடவுளின் நன்மையை தனிப்பட்ட முறையில் அனுபவிக்கவும், அவருடைய வாக்குறுதிகளில் அடைக்கலத்தையும் பலத்தையும் காணவும் நம்மை ஊக்குவிக்கிறது. “கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.” என்று சங்கீதம் 100:5 கடவுளுடைய மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. முக்கியமாக, கடவுளுடைய வார்த்தையானது அவருடைய அசைக்க முடியாத நற்குணத்திற்கான ஒரு உடன்படிக்கையாகும். அந்த நித்திய உடன்படிக்கை, அவரைத் தேடும் அனைவருக்கும் நம்பிக்கை, வழிகாட்டுதல் மற்றும் நித்திய சத்தியத்தின் அடித்தளத்தை வழங்குகிறது. நான் அதை அனுபவித்தேன்... அதன் விளைவுதான் இந்த ‘The Word & Me’ இணையதளம். அவருடைய வல்லமையுள்ள நாமம் ஒன்றே மகிமைப்படட்டும்...! |
![]() |
![]() |
![]() ![]() |
![]() |
![]() |