திருமதி மல்லிகா ஜெயராஜ் அவர்கள், அருப்புக்கோட்டை, சிங்காரத்தோப்பில் குடியிருந்து கொண்டு, அருகாமையில் உள்ள SBK தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்து, பணி நிறைவு பெற்றவர்கள்.

அன்னரின் கணவர் திரு ஜெயராஜ் அவர்கள், ஓய்வு பெற்ற தாசில்தார் நிலையில், உலக வாழ்வை நிறைவு செய்த பிறகு, திருமதி மல்லிகா ஜெயராஜ் அவர்கள் தனது இளைய மகளுடன் மதுரையில் வசித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பல ஆண்டுகளுக்கு முன்பாக தன் ஒரு வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த ரூபன், மற்றும் தனது 25ஆவது வயதில் இவ்வுலக வாழ்வை நிறைவு செய்த திரு பெஞ்சமின் செல்வன் பர்னபாஸ் ஆகிய தங்களின் மகங்கள் நினைவாக, தனது 80ஆவது வயதில் இப்புத்தகத்தை வெளியிட முன் வந்துள்ளார்கள். திரு பர்னபாஸ் அவர்கள் என்னுடன் பயின்றவர். அவரது கற்றல் மற்றும் விளையாட்டு ஆகிய திறன்கள் அனைவராலும் மிகவும் பாராட்டப்பட்டதை இங்கு பதிவு செய்யாமல் இருக்க முடியாது.

தற்போது மதுரையில் தனது இரண்டு மகள்களின் குடும்பமும் இருப்பதால், திருமதி மல்லிகா ஜெயராஜ் அவர்களும் அவர்களுடனேயே அங்கேயே தங்கிவிட்டார்.

வேத புத்தகத்தில் மோசேயினால் மனுக்குலத்திற்கு நம் தேவனால் வழங்கப்பட்ட தொடக்க நூல்களான ஆதியாகமம் முதல் உபாகமம் வரை நன்கு படித்து, தன் வாழ்க்கையில் அப்பியாசப்படுத்தி, அதன் விளைவாக இப் புத்தகத்தை எழுதியுள்ளார்.

இந்நூல்களை கவனமாக வாசித்து, அதனால் உண்டான சரீர சுகம், உள்ளான மனுஷனுக்குக் கிடைக்கும் ஆற்றல், மனநிறைவு ஆகியவற்றை அனுபவித்து, அவைகள் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் இப்புத்தகத்தை சுருங்கிய வடிவில் கொடுத்திருக்கிறார். இதை வாசித்து நாமும் இவ்வாசீர்வாதங்களைப் பெற்றுக் கொள்வோம்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக! ஆமென்!



முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top