எண்ணிக்கை என்றும் அழைக்கப்படும் இந்த ஆகமம் இஸ்ரவேலரின் வரலாற்றில், அவர்கள் சீனாய் மலையை விட்டுப் புறப்பட்டு, வாக்களிக்கப்பட்ட நாட்டின் கிழக்கு எல்லையை அடைந்தது வரை நாற்பது ஆண்டுகளாக நிகழ்ந்தவற்றின் தொகுப்பாகும். சீனாய் மலையினின்று புறப்படும் முன்னும் யோர்தானுக்கு கிழக்கே மோவாபில் ஒரு தலைமுறை கடந்த பினனும் மோசே செய்த கணக்கெடுப்பின் காரணமாக இந்நூல் இப்பெயரைப் பெறுகிறது.

மேலும், காதேசு - பர்னேயாவில் இஸ்ரவேலருக்கு நேர்ந்த இன்னல்களும், அவர்கள் மோசேக்கும் கடவுளுக்கும் எதிராகச் செய்த கிளர்ச்சியும் இந்நூலில் விரித்துரைக்கப்படுகின்றன. ஆயினும் கடவுள் அவற்றை மக்கள் மேல் அக்கறை கொண்டு பொருட்படுத்தாது அவர்களை ஏற்றுக் கொள்ளும் அன்பையும் இந்நூல் எடுத்துக் காட்டுகிறது. அதுபோன்று, கடவுளுக்கும் மக்களுக்கும் மோசே உண்மையுடன் பணியாற்றுவது இந்நூலில் சிறப்பிடம் பெறுகின்றது.

1.   இஸ்ரவேல் மக்கள் சீனாய் மலையைவிட்டுப் புறப்பட ஆயத்தப்படுதல் 1:1 - 9:29
 மக்கள் தொகை முதல் கணக்கெடுப்பு 1:1 - 4:49
 சட்டங்களும் விதிமுறைகளும் 5:1 - 8:20
 இரண்டாம் பஸ்கா 9:1-23
2.   சீனாய் மலை முதல் மோவாப் வரை 10:1 - 21:35
3.   மோவாபில் நிகழ்ந்தவை 22:1 - 32:42
4.   எகிப்து தொடங்கி மோவாப் வரையிலான விடுதலைப் பயண நிகழ்ச்சிகளின் சுருக்கம் 33:1-49
5.   யோர்தானைக் கடக்குமுன் கொடுக்கப்பட்ட கட்டளைகள் 33:50 - 36:13

  1. நசரேய விரதங்காக்கிறவன் நசரேயனாய் இருக்கும் நாளெல்லாம் கர்த்தருக்குப் பரிசுத்தமாயிருப்பான் என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 6:8)
  2. கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து உன்னைக் காக்கக் கடவர் என்ற ஆசீர்வாதத்திற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 6:24)
  3. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப் பண்ணி உன்மேல் கிருபையாய் இருக்கக்கடவர் என்ற ஆசீர்வாதத்திற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 6:25)
  4. கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி உனக்கு சமாதானம் கட்டளையிடக்கடவர் என்ற ஆசீர்வாதத்திற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 6:26)
  5. சாட்சிப் பெட்டியின் மேலுள்ள கிருபாசனமான இரண்டு கேருபீன்கள் நடுவிலிருந்து மோசேயுடன் பேசின தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 7:89)
  6. ‘கர்த்தருடைய கை குறுகியிருக்கிறதோ? என் வார்த்தையின்படி நடக்குமோ நடவாதோ என்று, நீ இப்பொழுது காண்பாய்’ என்று தம் வல்லமையைக் குறித்து மோசேயுடன் பேசிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 11:23)
  7. மூப்பராகிய எழுபதுபேரும் தீர்க்கதரிசனம் சொல்லும் வகையில், மோசேயின் மேலிருந்த ஆவியை, அவர்கள் மேல் வைத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 11:25)
  8. உம் தாசனாகிய மோசேயை உம்முடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாக இருக்கும்படி வைத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 12:7)
  9. என் ஆண்டவருடைய வல்லமை பெரிதாய் விளங்குவதற்காக தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 14:18)
  10. மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்த போது ஆரோனின் கோலை துளிர்க்க வைத்து, அது பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுக்க வைத்த கர்த்தவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 17:8)
  11. ஆரோனை நோக்கி, ‘இஸ்ரவேல் புத்திரர் நடுவில் நானே உன் பங்கும் உன் சுதந்தரருமாய் இருக்கிறேன்’ என்று சொன்ன கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 18:20)
  12. இஸ்ரவேலின் சத்தத்துக்குச் செவி கொடுத்து அவர்களுக்குக் கானானியரை ஒப்புக் கொடுத்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 21:3)
  13. காண்டா மிருகத்துக்கொத்த பெலனை இஸ்ரவேலருக்குக் கொடுத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 21:8)
  14. ‘உங்களை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். உங்களை சபிக்கிறவன் சபிக்கப்பட்டவன்’ என்று பிலேயாம் மூலம் இஸ்ரவேலருக்குக் கூறிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 21:9)
  15. பிலேயாம் தீர்க்கத்தரிசி உம்முடைய வழியை விட்டு விலகிய போது, ஒரு கழுதையைக் கொண்டு பிலேயாமுக்கு புத்தி சொன்ன தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 22:21-31)
  16. ‘பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல, மனம் மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல. அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ?’ என்று பிலேயாம் மூலம் சொன்னதற்காகக் கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 23:19)
  17. கர்த்தர் யாக்கோபிலே அக்கிரமத்தைக் காணாமலும், இஸ்ரவேலிலே குற்றம் பார்க்காமலும்; அவர்களுடைய தேவனாக அவர்களோடே கூட இருக்கிற தேவாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 23:21)
  18. யாக்கோபுக்கு விரோதமான மந்திரவாதமும் இல்லை, இஸ்ரவேலுக்கு விரோமான குறி சொல்லுதலும் இல்லை என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 23:23)
  19. இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் என்று பிலேயாமை உணரச் செய்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 24:1)
  20. தேவன் அருளும் வார்த்தைகளைக் கேட்டு, உன்னதமானவர் அளித்த அறிவை அறிந்து, சர்வ வல்லவரின் தரிசனத்தைக் கண்டு தாழ விழும் போது பிலேயாமின் கண்களைத் திறந்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 24:15-16)
  21. ஒரு நட்சத்திரம் யாக்கோபிலிருந்து உதிக்கும் ஒரு செங்கோல் இஸ்ரவேலிலிருந்து எழும்பும் என்று எங்கள் இரட்சகரின் முதலாம் வருகையைக் குறித்து தீர்க்கத்தரிசனமாய் அறிவித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 24:17)
  22. ஆசாரியனாகிய ஆரோனின் குமாரனான எலெயாசாரின் மகன் பினெகாஸ், தேவனுக்காக பக்திவைராக்கியம் காண்பித்து, இஸ்ரவேல் புத்திரருக்காகப் பாவநிவிர்த்தி செய்தபடியினால், அவனுக்கும் அவனுக்குப் பின்பு அவன் சந்ததிக்கும் நித்திய ஆசாரிய பட்டத்திற்குரிய உடன்படிக்கை உண்டாயிருக்கும் என்று பிரகடனப்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 25:6-13)
  23. உலகின் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை இஸ்ரவேல் ஜனங்கள் மத்தியில் மோசேயையும் ஆரோனின் குமாரனும் ஆசாரியனுமாகிய எலெயாசாரையும் வைத்து நடத்திய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 26:1-65)
  24. ‘கர்த்தருடைய சபை மேய்ப்பனில்லாத மந்தையைப் போல் இராதபடிக்கு மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனாகிய கர்த்தர் ஒரு புருஷனை அவர்கள் மேல் அதிகாரியாக ஏற்படுத்த வேண்டும்’ என்று மோசேயின் வேண்டுதலுக்கு உடனடியாக செவி சாய்த்து ‘ஆவியைப் பெற்றிருக்கிற புருஷனாகிய யோசுவா என்னும் நூனின் குமாரனை’ நியமித்த தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 27:16-17)
  25. ‘எனக்குச் சுகந்த வாசனையாக, தகனபலிகளுக்கு அடுத்த காணிக்கையையும் அப்பத்தையும், குறித்தகாலத்தில் எனக்குச் செலுத்தும்படிக்குக் கவனமாயிருக்கக்கடவீர்கள்’ என்று கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 28:1-2)
  26. ‘ஒருவன் கர்த்தருக்கு யாதொரு பொருத்தனை பண்ணினாலும், அல்லது யாதொரு காரியத்தைச் செய்யும்படி ஆணையிட்டுத் தன் ஆத்துமாவை நிபந்தனைக்குட்படுத்திக்கொண்டாலும், அவன் சொல்தவறாமல் தன் வாயிலிருந்து புறப்பட்ட வாக்கின்படியெல்லாம் செய்யக்கடவன்’ என்று கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 30:2)
  27. ‘கர்த்தருடைய சமுகத்தில் பொல்லாப்புச் செய்த சந்ததியெல்லாம் நிர்மூலமாகும்’ என்று எங்களுக்கு எச்சரிக்கையாய் எழுதி வைத்த கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 32:13)
  28. இஸ்ரவேல் புத்திரர் தங்கள் காணியாட்சியாகிய சுதந்தரத்தில் இருந்து லேவியருக்குக் குடியிருக்கும்படி பட்டணங்களையும் கொடுக்கவேண்டும், அதோடு அந்தப் பட்டணங்களைச் சூழ்ந்திருக்கிற வெளிநிலங்களையும் லேவியருக்குக் கொடுக்கவேண்டும் என்று கட்டளையிட்ட தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 35:1-4)
  29. ‘நீங்கள் குடியிருக்கும் என் வாசஸ்தலமாகிய தேசத்தைத் தீட்டுப்படுத்தவேண்டாம்; கர்த்தராகிய நான் இஸ்ரவேல் புத்திரர் நடுவே வாசம்பண்ணுகிறேன்’ என்று உம்முடைய ஜனங்களைத் தைரியப் படுத்தின கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 35:34)
  30. ‘சுதந்திரமானது ஒரு கோத்திரத்தை விட்டு வேறொரு கோத்திரத்தைச் சேரக்கூடாது’ என்று திட்டம் பண்ணின தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (எண். 36:9)


முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top