- நான் எகிப்தியருக்கு வரப்பண்ணின வியாதிகளில் ஒன்றையும் உனக்கு வரப்பண்ணேன். நானே உன் பரிகாரியாகிய கர்த்தர். (யாத். 15:26)
- கர்த்தர் சகல நோய்களையும் உன்னை விட்டு விலக்குவார். (உபா. 7:15)
- கர்த்தாவே நீர் ஒருவரே என்னை சுகமாய்த் தங்கப் பண்ணுகிறீர். (சங். 4:8)
- என் மேல் இரக்கமாயிரும் கர்த்தாவே: நான் பெலனற்றுப் போனேன். என்னைக் குணமாமக்கும் கர்த்தாவே. (சங்.6:2)
- என் தேவனாகிய கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன். என்னை நீர் குணமாக்கினீர். (சங். 30:2)
- என் ஆத்துமாவைக் குணமாக்கும் என்று நான் சொன்னேன். (சங்.41:4)
- அவர் உன் அக்கிரமங்களையெல்லாம் மன்னித்து, உன் நோய்களையெல்லாம் குணமாக்கி, உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு நன்மையினால் உன் வாயைத் திருப்தியாக்குகிறார். (சங்.103:3-5)
- அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார். (சங். 107:20)
- உன் அவங்கத்துக்குள்ளே சமாதானமும் உன் அரமனைகளுக்குள்ளே சுகமும் இருப்பதாக. (சங். 122:7)
- இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார். அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். (சங்.147:3)
- அனேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும். (நீதி. 11:14)
- அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (ஏசா. 53:5)
- நொறுங்கின இருதயம் உடையவர்களையும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களையும் குணமாக்குவேன் என்று கர்த்தர் சொல்கிறார். (ஏசா. 57:19)
- கர்த்தருக்கு உகந்த உபவாசம் இருக்கும்பொழுது விடியற்கால வெளுப்பைப் போல உன் வெளிச்சம் எழும்பி உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து கர்த்தருடைய மகிமை ... உன்னைப் பின்னாலே காக்கும். (ஏசா. 58:8)
- கர்த்தாவே என்னைக் குணமாக்கும். அப்பொழுது குணமாவேன். என்னை இரட்சியும், அப்பொழுது இரட்சிக்கப்படுவேன். தேவரீரே என் துதி. (எரே. 17:14)
- இதோ நான் அவர்களுக்கு (இஸ்ரவேல் புத்திரருக்கும் யூதா புத்திரருக்கும்) சவுக்கியமும் ஆரோக்கியமும் வரப்பண்ணி, அவர்களைக் குணமாக்கி அவர்களுக்கு பரிபூரண சமாதானத்தையும், சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன். (எரே. 33:6)
- கர்த்தரிடத்தில் திரும்புவோம் வாருங்கள். அவர் நம்மைப் பீறினார். அவரே நம்மைக் குணமாக்குவார். நம்மை அடித்தார். நம்முடைய காயங்களைக் கட்டுவார். (ஓசியா 6:1)
- தன் விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான். (ஆபகூக் 2:4)
- இயேசு கலிலேயா எங்கும் சுற்றி நடந்து ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கி சொஸ்தமாக்கினார். (மத். 4:23)
- இயேசு தாமே நம்முடைய பெலவீனங்களை ஏற்றுக் கொண்டு நம்முடைய நோய்களைச் சுமந்தார். (மத். 8:17)
- அப்பொழுது இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களையும் தம்மிடத்தில் வரவழைத்து அசுத்த ஆவிகளைத் துரத்தவும், சகல வியாதிகளையும், சகல நோய்களையும் நீக்கவும் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். (மத். 10:1)
- வியாதிகளைக் குணமாக்கி, பிசாசுகளைத் துரத்தும்படி தம்முடைய சீஷர்கள் அதிகாரமுடையவர்களாய் இருக்கவும் இயேசு அவர்களை ஏற்படுத்தினார். (மாற்.3:15)
- இயேசுவின் வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி, கூட்டத்தின் நடுவில் இருந்த இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டு ஆரோக்கியமடைந்த பன்னிரண்டு வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஸ்திரியைப் பார்த்து, 'மகளே உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது. நீ சமாதானத்தோடே போய் உன் வேதனை நீங்கி சுகமாயிரு' என்றார். (மாற். 5:24-34)
- இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும், பிரசித்தப்படுத்தவும் ... இயேசுவை அனுப்பினார். (லூக். 4:18)
- கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளுக்கும் நடுவாக இயேசு உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது பிணியாளிகளைக் குணமாக்கத் தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. (லூக். 5:17)
- 26. இயேசு, அலைக்கழிக்கிற அசுத்த ஆவியை அதட்டி, தன் முன் கொண்டுவரப்பட்ட இளைஞனைக் குணமாக்கி அவன் தகப்பனிடத்தில் அவனை ஒப்புக் கொடுத்தார். (லூக். 9:37-42)
- இயேசுவால் உண்டாகிய விசுவாசமே உங்களெல்லாருக்கும் முன்பாக இந்த சர்வாங்க சுகத்தை இவனுக்குள் கொடுத்தது. (அப். 3:16)
- கர்த்தாவே, பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாக உம்முடைய கரத்தை நீட்டி உம்முடைய ஊழியக்காரர் உம்முடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி அவர்களுக்கு அனுக்கிரகம் செய்தருளும். (அப். 4:24-30)
- இயேசு நன்மை செய்கிறவராயும், பிசாசின் வல்லமையில் அகிப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித் திரிந்தார். (அப். 10:38)
- இயேசு தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமானீர்கள். (1 பேது. 2:24)