பழங்கால இஸ்ரவேலர்களின் கடவுளுடைய தூய தன்மையும் அவரை வழிபடுவதற்கான முறைகளும், அவற்றை நிறைவேற்றும் குருக்களுக்கான நெறிகளும் அவ்வினத்தார் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கங்களும் இந்நூலில் இடம் பெறுகின்றன.

‘உன்னில் நீ அன்புகூருவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக’ என்னும் ஆண்டவர் இயேசுவின் இரண்டாம் பெரிய கட்டளை இந்நூலில் (19:18) இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

1.   காணிக்கைப் பலிகளுக்கான சட்டங்கள் 1:1 - 7:33
2.   ஆரோன், அவர்தம் புதல்வர் ஆகியோரை தேவ ஊழியத்திற்கென்று பிரதிஷ்டை செய்வதற்கான நெறிமுறைகள் 8:1 - 10:20
3.   ஆசாரியர்களின் பரிசுத்தமும் தீட்டும் பற்றிய சட்டங்கள் 11:11 - 5:3
4.   பாவ நிவாரண நாளுக்கான சட்டங்கள் 16:1-34
5.   தூய்மையான வாழ்விற்கும் வழிபாட்டிற்குமான சட்டங்கள் 17:1 - 27:43

  1. ‘கிருபாசனத்தின் மேல் ஒரு மேகத்தில் நான் காணப்படுவேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 16: 2)
  2. ‘மாம்சத்தின் உயிர் இரத்தத்தில் இருக்கிறது. எனவே ஆத்துமாவிற்காகப் பாவ நிவிர்த்தி செய்கிறது இரத்தமே’ என்பதை வெளிப்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 17: 11)
  3. ‘என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக் கொள்ளக்கடவீர்கள். அவைகளின் படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்’ என்று பிழைப்பதற்கான இரகசியத்தை, ‘நானே கர்த்தர்’ என்று உறுதியிட்டு கூறிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 18: 5)
  4. ‘நீங்கள் களவு செய்யாமலும், வஞ்சனை பண்ணாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்’ என்று கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 11)
  5. ‘பிறனை ஒடுக்காமலும், கொள்ளையிடாமலும் இருப்பாயாக. கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம் மட்டும். உன்னிடம் இருக்கலாகாது’ என்று கட்டளையிட்ட கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 13)
  6. ‘செவிடனை நிந்தியாமலும், குருடனுக்கு முன்னே தடுக்கலை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக’ என்ற வாழ்வியலை, ‘நானே கர்த்தர்’ என்று உறுதியிட்டு கூறிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 14)
  7. ‘உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள் சொல்லித் திரியாயாக. பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்பட வேண்டாம்’ என்று வழிகாட்டி, ‘நானே கர்த்தர்’ என்று உறுதியிட்டு கூறிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 16)
  8. ‘உன் சகோதரனை உள்ளத்திலும் பகையாயாக’ என்று நீர் இட்ட கட்டளைக்காகத் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 17)
  9. ‘பழிக்குப் பழி வாங்காமலும், உன் ஜனப் புத்திரர் மேல் பொறாமை கொள்ளாமலும், உன்னில் நீ அன்பு கூருவது போல பிறனிலும் அன்பு கூருவாயாக’ என்று நீர் இட்ட கட்டளைக்காகத் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 18)
  10. ‘யாதொன்றையும் இரத்தத்துடன் புசிக்க வேண்டாம். குறி கேளாமலும், நாள் பாராமலும் இருப்பீர்களாக’ என்று வழிகாட்டிய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 26)
  11. ‘என் ஓய்வு நாட்களை ஆசரித்து என் பரிசுத்த ஸ்தலத்தைக் குறித்து பயபக்தியாயிருப்பீர்களாக’ என்ற உம்முடைய கட்டளைக்காகத் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 30)
  12. ‘நியாய விசாரணையிலும். அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக’ என்று வழிகாட்டிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 19: 35)
  13. ‘என் கட்டளைகளைக் கைக்கொண்டு நடவுங்கள். நான் உங்களைப் பரிசுத்தமாக்குகிற கர்த்தர்’ என்ற தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 20: 8)
  14. ‘கர்த்தருக்கு ஸ்தோத்திர பலியைச் செலுத்துவீர்களானால் மனப்பூர்வமாய் அதைச் செலுத்துவீர்களாக’ என்ற உம்முடைய கட்டளைக்காகத் தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 22: 29)
  15. ‘என் கட்டளைகளின்படி செய்து என் நியாயங்களைக் கைக்கொண்டு அவைகளின்படி நடக்கக்கடவீர்கள். அப்பொழுது தேசத்திலே சுகமாய்க் குடியிருப்பீர்கள்’ என்று எங்களுக்கு புத்திமதி கூறிய கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 25: 18)
  16. ‘உங்கள் நுகத்தடிகளை முறித்து, உங்களை நிமிர்ந்து நடக்கப் பண்ணின உங்கள் தேவனாகிய கர்த்தர் நான்’ என்று உம்மை எங்களுக்கு வெளிப்படுத்தின தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 26: 13)
  17. ‘நான் யாக்கோபோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஈசாக்கோடே பண்ணின என் உடன்படிக்கையையும், ஆபிரகாமோடே பண்ணின என் உடன்படிக்கையையும் நினைப்பேன்; தேசத்தையும் நினைப்பேன்’ என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 26: 42)
  18. உம்முடைய ஜனங்கள் அவர்களது சத்துருக்களின் தேசத்திலிருந்தாலும், ‘நான் அவர்களை நிர்மூலமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களோடே பண்ணின என் உடன்படிக்கையை அபத்தமாக்கத்தக்கதாகவும், நான் அவர்களைக் கைவிடவும் வெறுக்கவுமாட்டேன்; நான் அவர்கள் தேவனாகிய கர்த்தர்’ என்று உம்முடைய கிருபையை உறுதிப்படுத்திய தேவனே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 26: 44)
  19. தலையீற்றானவைகள் எல்லாம் உம்முடையது என்று எங்களுக்கு வெளிப்படுத்தின கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 27: 26)
  20. உமக்கு நேர்ந்து கொள்ளப்பட்டதெல்லாம் உமக்குப் பரிசுத்தமாயிருக்கும் என்ற கர்த்தாவே உமக்கு ஸ்தோத்திரம். (லேவி. 27: 28)


முன்னுரை ஆசிரியர் உரை நன்றியுரை

ஆதியாகமம் யாத்திராகமம் லேவியராகமம் எண்ணாகமம் உபாகமம் தேவன் அருளிய சுகம்


Go to top