1 இராஜா. 17:8-16

அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்: நீ எழுந்து, சீதோனுக்கடுத்த சாறிபாத் ஊருக்குப் போய், அங்கே தங்கியிரு; உன்னைப் பராமரிக்கும்படி அங்கே இருக்கிற ஒரு விதவைக்குக் கட்டளையிட்டேன் என்றார்.

சாறிபாத் என்றால் சுத்திகரித்தல் என்று பொருள்.

  1. அது புறஜாதியார் தேசம்
  2. சுமார் 75 மைல் தூரம்
  3. ஒரு விதவையின் வீடு
  4. எதிரியான யேசபேலின் தாய் நாடான சீதோனுக்கு உட்பட்ட பகுதி.

ஆனாலும் எலியா சாறிபாத்துக்குப் போனார்.

அந்தப் பட்டணத்தின் ஒலிமுகவாசலுக்கு அவர் வந்தபோது, அங்கே ஒரு விதவை விறகு பொறுக்கிக்கொண்டிருந்தாள்; அவர் அவளைப் பார்த்துக் கூப்பிட்டு, நான் குடிக்கிறதற்குக் கொஞ்சம் தண்ணீர் ஒரு பாத்திரத்தில் எனக்குக் கொண்டுவா என்றான்.

கொண்டுவர அவள் போகிறபோது அவர் அவளை நோக்கிக் கூப்பிட்டு, கொஞ்சம் அப்பமும் உன் கையிலே எனக்குக் கொண்டுவா என்றார்.

அதற்கு அவள்: பானையில் ஒரு பிடி மாவும் கலயத்தில் கொஞ்சம் எண்ணெயுமே அல்லாமல், என்னிடத்தில் ஒரு அடையும் இல்லையென்று உம்முடைய தேவனாகிய கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன்; இதோ, நானும் என் குமாரனும் சாப்பிட்டுச் செத்துப்போக, அதை எனக்கும் அவனுக்கும் ஆயத்தப்படுத்துகிறதற்கு இரண்டு விறகு பொறுக்குகிறேன் என்றாள்.

இந்த இடத்தை நாம் கவனிக்க வேண்டும்.

ஆதி 2:17 ஆனாலும் நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.

ஆதி 3:6 ஏவாள் அதின் கனியைப் பறித்து, புசித்து, ஆதாமுக்கும் கொடுத்தாள்; அவனும் புசித்தான்.

ஆதி 3:9-10 தேவனாகிய கர்த்தர் ஆதாமைக் கூப்பிட்டு: நீ எங்கே இருக்கிறாய் என்றார். அதற்கு அவன்: நான் தேவரீருடைய சத்தத்தைத் தோட்டத்திலே கேட்டு, நான் நிர்வாணியாயிருப்பதினால் பயந்து, ஒளித்துக்கொண்டேன் என்றான்.

ஆதாமின் சந்ததி எல்லாருமே ஆதாமைப் போன்றவர்கள். ஆதாமின் கீழ்ப்படியாமை, பயம் எல்லாருக்கும் உண்டு. பயமானது அவிசுவாசம், அதைரியம், அமைதியின்மை, அவநம்பிக்கை ஆகியவற்றை அளிக்கும்.

அந்த ஸ்திரீக்கும் பழைய ஆதாமின் குணங்கள் உண்டு. எலியா தனக்கும் ஓர் அடை கேட்டதும் பயப்படுகிறாள். எலியா யோவான் ஸ்நானகனின் முன்னோடி. அவர், ‘பயப்படாதே; … … முதலில் அதிலே எனக்கு ஒரு சிறிய அடையைப் பண்ணி என்னிடத்தில் கொண்டுவா;’ என்றார்.

ஏன் எலியாவுக்கு முதல் அடை?

யோவான் 2:7 இயேசுவானவர் ஜாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அப்படி நிரப்பப்பட்ட தண்ணீரைத்தான் திராட்சை ரசமாக்கினர். வெறும் ஜாடியில் திராட்சை ரசம் உண்டாகவில்லை.

யோவான் 6:9-11 5 அப்பம், 2 மீனைத்தான் ஆசீர்வதித்து 5000 பேரைப் போஷித்தார்.

சாறிபாத் ஒரு விதவை. அவளுக்கும், மகனுக்கும் அடை சுட்டு விட்டால் மாவுப் பானை காலியாகி விடும். கொஞ்சம் மாவு வேண்டும். அப்போதுதான் அது பெருகும். அதனால் அப்படிச் சொன்னார். மாவும் எண்ணெயும் பெருகியது. எலியாவும், அந்த ஸ்திரீயும், அவள் வீட்டாரும் அனேக நாட்கள் சாப்பிட்டார்கள்.

கர்த்தர் எலியாவைக் கொண்டு சொன்ன வார்த்தையின்படியே பானையில் மாவு செலவழிந்து போகவுமில்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை.

பானையின் மாவு பொங்கி வழியவில்லை கலசத்தில் எண்ணெய் நிறைந்து கொட்டவும் இல்லை. ஆனாலும் இருந்த மாவும் எண்ணெயும் எடுக்க எடுக்கக் குறையாமல் இருந்தது.

நம்மிடம் இருக்கும் பணத்தில் காணிக்கையோ, ஏழை மாணவ மாணவியருக்கு உதவியோ, கைவிடப்பட்டவர்களுக்கு ஆதரவோ… ஏதோ ஒன்றை நாம் ஆண்டவருக்கென்று கொடுத்தால் நம்மிடம் இருப்பது பெருகும்.

லூக். 14:25-26 … தேசமெங்கும் மிகுந்த பஞ்சம் உண்டாயிருந்தபோது, இஸ்ரவேலருக்குள் அநேகம் விதவைகள் இருந்தார்கள். ஆயினும் எலியா சீதோன் நாட்டிலுள்ள சரெப்தா (சாறிபாத்) ஊரிலிருந்த ஒரு விதவையினிடத்திற்கு அனுப்பப்பட்டானேயல்லாமல் மற்றொருத்தியினிடத்திற்கும் அனுப்பப்படவில்லை.

சாறிபாத் விதவை தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டவள். ஜெபித்தவள். அதனால் எலியா தேவனால் அவளிடத்திற்கு அனுப்பப்படுகிறார். தேவன்தான் ‘உன்னைப் பராமரிக்கும்படி அங்கே ஒரு விதவைக்குக் கட்டளை இட்டேன்’ என்றார். கர்த்தர் எலியாவைக் கொண்டு செய்த அற்புதத்தால் மாவும் எண்ணெயும் பெருகியது.



முன்னுரை அணிந்துரை ஆசிரியர் உரை-1 மாவும் எண்ணெய்யும்
பெருகியது
விதவையின் மகன்
உயிர் பெற்றது

ஆகாபும் எலியாவும் எலியாவும் காகங்களும் அக்கினியால் அற்புதம் ஆகாப்-யேசபேலும்
எலியாவும்
சுழல் காற்றில் எலியா
பரலோகம் சென்றது

ஆசிரியர் உரை-2 எங்கள் வாழ்வில்
அற்புதங்கள்
நன்றியுரை


Go to top