ஆகாப் இஸ்ரவேலின் ராஜா. சமாரியாவில் இஸ்ரவேவின் மேல் இருபத்திரண்டு வருடம் ராஜ்யபாரம் பண்ணினான்.(1 இராஜா. 16:29)
ஆகாபின் தகப்பன் உம்ரி. அவன் சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு மலையினுடைய எஜமானாயிருந்த சேமேருடைய பேரின்படியே சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.(1 இராஜா. 16:23_24)
உம்ரியின் குமாரனாகிய ஆகாப், தனக்கு முன்னிருந்த எல்லாரைப் பார்க்கிலும் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். அவன் சீதோனியரின் ராஜாவாகிய ஏத்பாகாலின் குமாரத்தி யேசபேலை விவாகம் பண்ணினதுமல்லாமல், அவன் போய் பாகாலையும் சேவித்து அதைப் பணிந்துகொண்டு, தான் சமாரியாவிலே கட்டின பாகாலின் கோவிலில் பாகாலுக்குப் பலிபீடத்தை எடுப்பித்தான்.
ஆகாப் ஒரு விக்கிரகத்தோப்பையும் வைத்து, இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்குக் கோபம் உண்டாக்கும்படிக்கு தனக்கு முன்னிருந்த இஸ்ரவேலின் ராஜாக்களெல்லாம் செய்ததைப் பார்க்கிலும் அதிகமாய்ச் செய்துவந்தான்.(1 இராஜா. 16:30_33)
கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றார். (1 இராஜா. 17:1)
அநேகநாள் சென்று, மூன்றாம் வருஷமாகையில், கர்த்தருடைய வார்த்தை எலியாவுக்கு உண்டாகி: நீ போய் ஆகாபுக்கு உன்னைக் காண்பி; நான் தேசத்தின்மேல் மழையைக் கட்டளையிடுவேன் என்றார். அப்பொழுது எலியா ஆகாபுக்குத் தன்னைக் காண்பிக்கப் போனார்; (1 இராஜா. 18:1_2)
அதுவரை கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக் கொண்டிரு என்ற கர்த்தரின் வார்த்தையின் படியே எலியா அங்கும் சாறிபாத் விதவையின் வீட்டிலும் மறைந்து இருந்தார்.
ஆகாபின் அரண்மனை விசாரிப்புக்காரன், கர்த்தருக்கு மிகவும் பயந்து நடக்கிறவன். யேசபேல் கர்த்தருடைய தீர்க்கத்தரிசிகளைச் சங்கரிக்கிற போது, நூறு தீர்க்கத்தரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்து வைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து அவர்களைப் பராமரித்து வந்தான்.
(1 இராஜா. 18:5_13)
ஆகாப் ஒபதியாவைப் பார்த்து: நீ தேசத்திலிருக்கிற எல்லா நீரூற்றுகளிடத்திலும், எல்லா ஆறுகளிடத்திலும் போ; நாம் சகல மிருகஜீவன்களையும் சாகக்கொடாமல், குதிரைகளையும் கோவேறு கழுதைகளையுமாவது உயிரோடே காப்பாற்றும்படிக்கு நமக்குப் புல் அகப்படுமா என்று பார் என்றான்.
அப்படியே தேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி, அதைப் பகுத்துக்கொண்டு, ஆகாப் ஒரு வழியாயும், ஒபதியா வேறொரு வழியாயும் போனார்கள்.
ஒபதியா வழியில் போகும்போது, எலியா அவனுக்கு எதிர்ப்பட்டான்; அவன் இவனை இன்னான் என்று அறிந்து, முகங்குப்புற விழுந்து, நீர் என் ஆண்டவனாகிய எலியா அல்லவா என்று கேட்டதற்கு;
அவன், நான்தான்; நீ போய், இதோ, எலியா வந்திருக்கிறான் என்று உன் ஆண்டவனுக்குச் சொல் என்றார்.
அதற்கு அவன், நான் உம்மை விட்டுப்போனவுடனே ஒருவேளை கர்த்தருடைய ஆவியானவர் உம்மை எடுத்து, நான் அறியாத இடத்திற்குக் கொண்டு போவார்; அப்பொழுது நான் ஆகாபிடத்திற்குப் போய் அறிவித்த பின்பு, அவன் உம்மைக் காணாவிட்டால், என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
தான் கர்த்தருடைய தீர்க்கதரிசிகளில் நூறுபேரைக் காப்பாற்றியதை எல்லாம் எலியாவிடம் சொல்கிறான்.
அதற்கு எலியா: இன்றைக்கு என்னை ஆகாபுக்குக் காண்பிப்பேன் என்றார். அப்பொழுது ஒபதியா, ஆகாபிடம் அதை அறிவிக்கச் சென்றான். ஆகாப் எலியாவைச் சந்திக்கச் சென்றான்.
ஆகாப் எலியாவைக் கண்டபோது, ஆகாப் அவனை நோக்கி: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நீயல்லவா என்றான். அதற்கு அவர்: இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவன் நான் அல்ல; கர்த்தரின் கட்டளைகளை விட்டு பாகால்களைப் பின்பற்றினதினால் நீரும் உம்முடைய தகப்பன் வீட்டாருமே இஸ்ரவேலைக் கலங்கப்பண்ணுகிறவர்கள்.
கர்மேல் பர்வதத்தில் ஒரு சம்பவம் நடந்தது. ஜனங்களெல்லாரும் முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
எலியா ஆகாபை நோக்கி: போஜனபானம்பண்ணும்; பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது என்றார். எலியா கர்மேல் பர்வதத்தினுடைய சிகரத்தின் மேல் ஏறி, தரையிலே பணிந்து, தன் முகம் தன் முழங்காலில் படக்குனிந்து, தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றார்; (1 இராஜா. 18:41_44)
சாலொமோன் ராஜா இஸ்ரவேலின் சபையார் எல்லாருக்கும் முன்பாக முழங்காற்படியிட்டு, தன் கைகளை வானத்திற்கு நேராக விரித்து ஜெபித்தான். (2 நாளா. 6:13)
முழங்கால் படியிட்டு ஜெபிப்பது ஆண்டவருக்கு மகிமை செலுத்துவது; நம் வேண்டுதலைக் கர்த்தர் கேட்கச் செய்வது.
அப்போழுது யோசபாத் தரைமட்டும் முகங்குனித்தான். சகல யூதா கோத்திரத்தாரும் எருசலேமின் குடிகளும் கர்த்தரைப் பணிந்து கொண்டு கர்த்தருக்கு முன்பாகத் தாழவிழுந்தார்கள். (2 நாளா. 20:18)
ஜெயம் பெற்றார்கள்.
இஸ்ரவேல் நாட்டில் மூன்றரை வருடமாக மழை இல்லை. கர்த்தர் வானத்தைத் திறந்து மழை வருஷிக்கப்பண்ண வேண்டும்.
எலியா தன் ஊழியக்காரனை நோக்கி: நீ போய்ச் சமுத்திரமுகமாய்ப் பார் என்றார்; அவன் போய்ப் பார்த்து, ஒன்றும் இல்லை என்றான்; நீ இன்னும் ஏழுதரம் போய்ப் பார் என்றார். ஏழாந்தரம் இவன்: இதோ, சமுத்திரத்திலிருந்து ஒரு மனுஷனுடைய உள்ளங்கை அத்தனைச் சிறிய மேகம் எழும்புகிறது என்றான்;
மலை உச்சியில் ஏறின எலியா தன்னை முழுமையாகத் தாழ்த்திக் கொண்டு வேண்டினார். எலியா தன் விசுவாசக் கண்ணால் பெருமழையைக் கண்டார். எலியா, நீ போய், ஆகாபை நோக்கி: மழை உம்மைத் தடைசெய்யாதபடிக்கு இரதத்தைப் பூட்டி, போய்விடும் என்று சொல் என்றார்.
அதற்குள்ளாக வானம் மேகங்களினாலும் காற்றினாலும் கறுத்து பெருமழை உண்டாயிற்று; ஆகாப் இரதத்தில் ஏறி யெஸ்ரயேலுக்குப் போனான்.
கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவர் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்கு முன் ஓடினார்.
கர்த்தரின் பத்துக் கட்டளைகளைத் தெளிவாகச் சொல்லும் யாத்திராகமம் 20:2_3 வசனங்கள் விக்கிரக வணக்கம் கூடாது என்று தெளிவாகச் சொல்லுகிறது. கட்டளைகளை மீறினல் தண்டனை உண்டு.
ஆகாப் ராஜா, யேசபேலைத் திருமணம் செய்து கொண்டதால் அவளுடைய வழக்கத்தின்படி பாகாலைச் சேவிக்கின்றான். விக்கிரகத் தோப்பை உண்டு பண்ணினான். அதன் விளைவாகக் கர்த்தர் மூன்றரை ஆண்டுகளாக மழை ஏற்படாமல் தண்டிக்கிறார். சகல மக்களும் மிருகங்களும் வாடுகிறார்கள். எலியா தீர்க்கத்தரிசியும் சிரமத்தை அனுபவிக்கிறார். மக்கள் மனம் திருந்தியதும் மழை பெய்தது.
யாக்கோபு 5:17_18 சொல்லுகிறது:
எலியா என்பவன் நம்மைப்போலப் பாடுள்ள மனுஷனாயிருந்தும், மழை பெய்யாதபடிக்குக் கருத்தாய் ஜெபம் பண்ணினான், அப்பொழுது மூன்று வருஷமும் ஆறு மாதமும் பூமியின் மேல் மழை பெய்யவில்லை. மறுபடியும் ஜெபம் பண்ணினான், அப்பொழுது வானம் மழையைப் பொழிந்தது, பூமி தன் பலனைத் தந்தது.
![]() |
![]() |
![]() |
முன்னுரை | ![]() |
அணிந்துரை | ![]() |
ஆசிரியர் உரை-1 | ![]() |
மாவும் எண்ணெய்யும் பெருகியது | ![]() |
விதவையின் மகன் உயிர் பெற்றது |
ஆகாபும் எலியாவும் | ![]() |
எலியாவும் காகங்களும் | ![]() |
அக்கினியால் அற்புதம் | ![]() |
ஆகாப்-யேசபேலும் எலியாவும் | ![]() |
சுழல் காற்றில் எலியா பரலோகம் சென்றது |
ஆசிரியர் உரை-2 | ![]() |
எங்கள் வாழ்வில் அற்புதங்கள் | ![]() |
நன்றியுரை |