இல்லாதவைகளை இருக்கிறவைகளைப் போல அழைக்க முடிந்தவர் கர்த்தர். கற்களிலிருந்து மட்டுமல்ல; காற்றிலிருந்தும்… ஏன் சூன்யத்திலிருந்தும் நாம் கேட்பவற்றைக் கர்த்தரால் கொடுக்க முடியும். அவரால் முடியாதது எதுவுமில்லை தேவைக்கேற்ப நமது விருப்பப்படி எதையும் அவரால் செய்ய முடியும்.
1968 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் என் கணவருக்குத் தலை முதல் கால் வரை அம்மை போட்டு விட்டது. கண்ணில் கூட அம்மை. முதுகில் கொப்பளங்கள் இருந்ததால் நேராகப் படுக்க முடியாது. ஜெபம் பண்ணுவதுபோல் அனேக நேரம் படுத்திருப்பார்கள். அக்காலத்தில் அம்மை நோய்க்கு எந்த ஒரு மருந்தோ மாத்திரையோ கிடையாது. கைப்பக்குவம் தான். அதிக சிரமம்.
அப்போது நான் 7மாத கர்ப்பவதி. என் வயிற்றில் இருந்த குழந்தை அதிகம் புரளும். ஆண் பிள்ளை தரித்திருந்தால்தான் மிகவும் அசைவு இருக்கும். “இயேசப்பா இந்தக் குழந்தை துறுதுறுவென்று இருக்கிறது. உமது அடியானோ அம்மை நோயால் மிகவும் சிரமப்படுகிறார். இந்தக் குழந்தை பெண்பிள்ளையாகவே இருக்கட்டும். உமது அடியானுக்கு சுகம் கொடும் சுவாமி!” என்று ஜெபித்தேன். சுமார் 2மாதம் கழித்து என் கணவர் சுகமாகி எழுந்தார். எனக்குப் பெண் குழந்தையே பிறந்தது. விசுவாசம் செயல் பட்டது. அதிசயம்.
1992ஆம் ஆண்டு மே மாதம் 25ஆம் தேதி என் கணவர் தன் அலுவலகத்தில் இருந்து வீட்டுக்கு மதியம் சாப்பிட வந்து விட்டு, “விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்திற்கு சில ஆவணங்களை நான் கொண்டு போக வேண்டியதிருக்கிறது. அப்படிப் போவதால் இரவு வருவதற்கு தாமதம் ஆகும்” என்று சொல்லி விட்டுப் போனார்.
அருப்புக்கோட்டையில் புதுக்கடை வீதி என்று ஒன்று உள்ளது. அந்த இடத்திற்குப் பக்கமாகப் போகும் போது, சைக்கிளை எங்கு வைப்பது என்று யோசித்து, தாலுகா அலுவலகத்திற்குப் போய் சைக்கிளை வைத்து விட்டுப் பேருந்து நிலையம் போயிருக்கிறார். அக்காலத்தில் விருதுநகர் செல்வதற்கு அரைமணி தேரத்திற்கு ஒரு பேருந்துதான் இருக்கும். என் கணவர் போக வேண்டிய பேருந்து போய்விட்டது. அதனால் அடுத்த பேருந்தில் அவர் போகவேண்டியதாகிவிட்டது.
அப்பொழுது ஒரு செய்தி வருகிறது: ‘இராஜபாளையத்திற்குச் சென்று கொண்டிருந்த அந்தத் தனியார் பேருந்து பாலவநத்தம் அருகே செல்லும்போது வெடித்துச் சிதறி முழுவதும் தீப்பிடித்து எரிந்து விட்டது. அந்த பஸ்ஸில் போன 30 பேர் இறந்துபோனார்கள். ஏராளமானோருக்குப் பலத்த தீ காயம்’ என்று. ஓட்டுனரும் நடத்துனரும் சட்டத்திற்குப் புறம்பாக வெடி பொருட்களை உடன் கொண்டு செல்வதற்குச் சில பயணிகளுக்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அப்படி கொண்டு செல்லப்பட்ட அந்த வெடிப் பொருட்கள், மே மாத வெக்கையில் வெடித்துச் சிதறியதாலேயே அந்த கோர விபத்து நடந்திருக்கிறது. அவர்களுள் பேருந்தின் ஓட்டுனர் நயினாரும் ஒருவர்.
எனது மகன் பர்னபாஸ் உடன் கூடைப்பந்து விளையாட்டுக் குழுவில் இருந்தவர் - தற்போது ஒரு மேல் நிலைப் பள்ளியில் உடற் பயிற்சி ஆசிரியராக வேலை பார்ப்பவர் - முகம் தவிர உடல் முழுவதும் எரிந்து, அதிக வேதனைப்பட்டு, ஏராளமான மருத்துவ சிகிச்சைகள் பார்த்து உயிர் பிழைத்தார்.
என் கணவர் இரவு வீட்டுக்கு வந்த பின் பேருந்து எரிந்து போன நிகழ்வைச் சொல்லி, “நல்ல வேளையாக நான் அந்தப் பேருந்தில் போகவில்லை. அப்படிப் போயிருந்தால் எனக்கும் ஏதாவது ஆகியிருக்கும்” என்றார். இப்படி தீயிலிருந்து தேவன் என் கணவரைக் காப்பாற்றினார்.
வாழ்க்கையை ஆக்கவோ அழிக்கவோ நம்மால் முடியாது. வாழத்தான் முடியும். படைத்தவரின் சித்தத்தில் என் கணவருக்கு வாழ்க்கை கிடைத்தது.
1989 டிசம்பரில் எங்கள் பெரிய மகளுக்குத் திருமணம் நடந்தது. எனது நாத்தனார் மகனுக்குத்தான் பெண் கொடுத்தோம். அது சமயம் அருட்திரு அதிசயம் பாஸ்டர் ஐயா அவர்கள் அருப்புக்கோட்டை சி.எஸ்.ஐ. ஆலய குருவாயிருந்தார். அவர்தான் கர்த்தருக்குள் மகிமையாக அத்திருமணத்தை நடத்தி வைத்தார். அத்திருமண நிகழ்வுக்கு அநேக போதகர்கள், பல உற்றார் உறவினர்கள், தாலுகா அலுவலகத்திலிருந்து அனேகர், என்னுடன் பணிபுரிந்த ஆசிரிய ஆசிரியைகள், சபை மக்கள் எனத் திரளானோர் வந்து மணமக்களை ஆசீர்வதித்தனர்.
அந்தச் சமயம் என் கணவர் மானாமதுரை மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அந்த மாஜிஸ்ட்ரேட் திருமணத்திற்கு முந்தின நாளே அருப்புக்கோட்டைக்கு வந்து தங்கிவிட்டார். மறுநாள் காலையில் ஆலயத்தில் நடந்த திருமண ஆராதனையில் கலந்து கொண்டு மணமக்களை மனதார ஆசீர்வதித்தார். இத் திருமணத்தில் சகோ. துதி சங்கர் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, பிரசங்கம் செய்து, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
அந்தச் சமயம் என் கணவர் மானாமதுரை மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அந்த மாஜிஸ்ட்ரேட் திருமணத்திற்கு முந்தின நாளே அருப்புக்கோட்டைக்கு வந்து தங்கிவிட்டார். மறுநாள் காலையில் ஆலயத்தில் நடந்த திருமண ஆராதனையில் கலந்து கொண்டு மணமக்களை மனதார ஆசீர்வதித்தார். இத் திருமணத்தில் சகோ. துதி சங்கர் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, பிரசங்கம் செய்து, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
அந்தச் சமயம் என் கணவர் மானாமதுரை மாஜிஸ்ட்ரேட் அலுவலகத்தில் தலைமை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். அந்த மாஜிஸ்ட்ரேட் திருமணத்திற்கு முந்தின நாளே அருப்புக்கோட்டைக்கு வந்து தங்கிவிட்டார். மறுநாள் காலையில் ஆலயத்தில் நடந்த திருமண ஆராதனையில் கலந்து கொண்டு மணமக்களை மனதார ஆசீர்வதித்தார். இத் திருமணத்தில் சகோ. துதி சங்கர் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு, பிரசங்கம் செய்து, மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
1994 செப்டம்பரில் இளைய மகளுக்குத் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை மதுரையைச் சேர்ந்தவர். அருட்திரு சாமுவேல் சௌந்திர பாண்டியன் அவர்கள் அப்போது அருப்புக்கோட்டை ஆலயத்தின் குருவானவராக இருந்தார். அவர்தான் திருமணத்தையும் கர்த்தரின் நாம மகிமைக்கென்று சிறப்பாக நடத்தி வைத்தார். அநேகம் பேர் கலந்து கொண்டார்கள்.
அநேக குருவானவர்கள், நமது அத்தியாட்சாதீன அதிகாரிகள், பல ஊர்களிலிருந்து உறவினர்கள், ஏராளமான உள்ளூர் நண்பர்கள் எனப் பலர் திருமணத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அது சமயம் என் கணவர் விருதுநகரில் தாசில்தாராக வேலை பார்த்துக் கொண்டிருந்தார். திருமணத்தன்று அப்போதைய விருதுநகர் ஆட்சியர் நேரடியாக ஆலயத்திற்கு வந்து, திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினார்.
தேவன் தமது மகிமையை இரண்டு திருமணங்களிலும் விளங்கப் பண்ணினார்.
1991இல் எங்கள் இளைய மகள், கள்ளிமந்தையம் என்ற ஊரில் உள்ள ஓர் உயர் நிலைப் பள்ளியில் B.Sc. B.Ed. கணக்கு ஆசிரியையாக வேலையில் சேர்ந்தாள். ஒரு ரூபாய் கூட சம்பளம் கிடையாது, 4 வருடம் அங்கேயே தங்கி அவ்வாறு வேலை பார்த்து வந்தாள். நானும் அவள் அப்பாவும் மாறி மாறிப் போய் அவளைப் பார்த்து வருவோம். சில மாதங்கள் கழித்து, என் சித்தியும் சித்தப்பாவும் அங்கேயே சென்று அவளோடேயே தங்கி அவளைப் பார்த்துக் கொண்டார்கள். எங்களுக்கும் நிம்மதியாக இருந்தது.
எனது மகன் பர்னபாஸின் பெயர் அத்தியாட்சாதீன ஆசிரியப் பணி நியமனப் பட்டியலில் முதலாவதாக இருந்தது. திடீரென்று எதிர்பாராதவிதமாக அவன் கர்த்தருக்குள் நித்திரை அடைந்துவிட்டபடியாலும், 4 வருடங்கள் சம்பளமில்லாமல் வேலை பார்த்து வந்தபடியாலும் கருணை அடிப்படையில் என் இளைய மகளுக்கு 1995ஆம் வருடம் மதுரை ஓ.சி.பி.எம். பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிரந்தர ஆசிரியப் பணி கிடைத்தது.
தாழ்மையாக இருந்து, வேதனை நதியில் நீந்திய மகளுக்கு, அவள் தலையை உயர்த்தி, அனைத்துக்கும் மேலாக உயர் நிலையில் நிறுத்திய தேவன் அற்புதமானவர்.
வேதத்தில் எண்ணி முடியாத அதிசயங்கள் உண்டு. எங்கள் வாழ்க்கையிலும் அப்படித்தான் தேவன் அதிசயமாக வழி நடத்தினார்.
அன்பின் நீர்த்துளிகளால் நனைந்த பூஞ்சொற்களால் மனம் திறந்து தேவ மகிமைக்கென்று சொல்கிறேன்.
நான் என் தேவனில் அன்பு கூருகிறேன்.
![]() |
![]() |
![]() |
முன்னுரை | ![]() |
அணிந்துரை | ![]() |
ஆசிரியர் உரை-1 | ![]() |
மாவும் எண்ணெய்யும் பெருகியது | ![]() |
விதவையின் மகன் உயிர் பெற்றது |
ஆகாபும் எலியாவும் | ![]() |
எலியாவும் காகங்களும் | ![]() |
அக்கினியால் அற்புதம் | ![]() |
ஆகாப்-யேசபேலும் எலியாவும் | ![]() |
சுழல் காற்றில் எலியா பரலோகம் சென்றது |
ஆசிரியர் உரை-2 | ![]() |
எங்கள் வாழ்வில் அற்புதங்கள் | ![]() |
நன்றியுரை |