1 இராஜா. 17:17-24

இவைகள் நடந்தபின்பு, வீட்டுக்காரியாகிய அந்த ஸ்திரீயின் மகன் வியாதியில் விழுந்தான்; அவனுடைய சுவாசம் போகுமட்டும் அவனுடைய வியாதி அதிகரித்துக்கொண்டே இருந்தது.

அப்பொழுது அவள் எலியாவை நோக்கி: தேவனுடைய மனுஷனே, எனக்கும் உமக்கும் என்ன? என் அக்கிரமத்தை நினைக்கப்பண்ணவும், என் குமாரனைச் சாகப்பண்ணவுமா? என்னிடத்தில் வந்தீர் என்றாள்.

அதற்கு அவன்: உன் குமாரனை என்னிடத்தில் தா என்று சொல்லி, அவனை அவள் மடியிலிருந்து எடுத்து, தான் தங்கியிருக்கிற மேல்வீட்டிலே அவனைக் கொண்டுபோய், தன் கட்டிலின்மேல் வைத்து:

என் தேவனாகிய கர்த்தாவே, நான் தங்கியிருக்க இடங்கொடுத்த இந்த விதவையின் மகனைச் சாகப்பண்ணினதினால் அவளுக்குத் துக்கத்தை வருவித்தீரோ என்று கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு;

அந்தப் பிள்ளையின்மேல் மூன்றுதரம் குப்புறவிழுந்து: என் தேவனாகிய கர்த்தாவே, இந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பிவரப்பண்ணும் என்று கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்.

வச.17 - விதவையினுடைய மகனின் வியாதி அதிகரித்துக் கொண்டே இருந்தது.

1. வியாதி, ஒருவன் செய்யும் பாவத்தினால் வருகிறது.சங். 38:3 - என் பாவத்தினால் என் எலும்புகளில் சவுக்கியமில்லை.

2. தேவ கிரியை வெளிப்படும்படி வியாதி வருகிறது.யோவான் 9:2, 3 - அவருடைய சீடர்கள் அவரை நோக்கி, ரபீ இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம்? என்று இயேசுவிடம் கேட்டார்கள். இயேசு பிரதியுத்தரமாக … தேவனுடைய கிரியை இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான் என்றார்.

3. சாத்தானால் வியாதி வருகிறது.யோபு 3:7 - அப்பொழுது சாத்தான் கர்த்தருடைய சந்நிதியை விட்டுப் புறப்பட்டு யோபின் உள்ளங்கால் தொடங்கி, அவன் உச்சந்தலை மட்டும் கொடிய பருக்களால் அவனை வாதித்தான்.

இந்தப் பகுதியில் சாறிபாத் விதவை வீட்டில் மாவும் எண்ணெயும் குறைவு படவில்லை. சுற்றிலும் பஞ்சம். ஆகாரக் குறைவு. விதவை வீட்டிலோ நிறைவு. ஜனங்கள் பொறாமைப்படுகிறார்கள். அற்புதம் நடந்த வீடு. யாரைத் தாக்கலாம் என்று சாத்தான் நோட்டமிடுகிறான். விதவைக்கு ஒரே மகன். மகனைத் தாக்கினால் விதவை ஆண்டவரை விட்டு விடுவாள் என்று சாத்தான் விதவையின் மகனுக்கு வியாதியைக் கொடுக்கிறான். ‘என் அக்கிரமத்தை நினைக்கப் பண்ணவும். என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்’ என்று அந்த விதவை எலியாவிடம் கேட்கிறாள்.

ஆதி 1:1 - ஆதியிலே தேவன் வானத்தையும், பூமியையும் சிருஷ்டித்தார்.

தேவனது படைப்பெல்லாம் அழகானது, நிறைவானது, அற்புதமானது.

ஆதி 1:2 - பூமியானது ஒழுங்கின்மையும் வெறுமையுமாய் இருந்தது; ஆழத்தின்மேல் இருள் இருந்தது; தேவ ஆவியானவர் ஜலத்தின்மேல் அசைவாடிக்கொண்டிருந்தார்.

முதல் வசனத்திற்கும், இரண்டாம் வசனத்துக்குமிடையே என்ன நடந்தது? ஒழுங்கின்மை, வெறுமை, இருள். சாத்தானின் கிரியை நடக்கிறது.

ஆனால், அதே வசனம் 2ல் தேவ ஆவியானவர் ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தார். ஆவியானவர் சாத்தானின் கிரியைகளைத் தோற்கடித்தார்.

இங்கும் அதே விசயங்கள். அழகாகப் போய்க் கொண்டிருந்த சாறிபாத் விதவை வீட்டில் அவள் மகனுக்கு வியாதினயக் கொடுத்து விதவையின் மனதில் குற்ற உணர்வு (நான் அக்கிரமம் செய்து விட்டேன்) ஏற்படுத்தி, மகனை மரிக்கப் பண்ணவும் சாத்தான் இடைபடுகிறான். விதவை எலியாவிடம் முறையிடுகிறாள். அவளது அரற்றல் எலியாயை அசைத்தது. தான் தங்கியிருந்த மேல் வீட்டிலே அவனைக் கொண்டு போய்க் கட்டிலில் கிடத்தினான்.

மாற்கு 14:14-15 - பஸ்காவைப் புசிக்க இயேசு சுவாமி மேல் வீட்டறையைத் தெரிந்தெடுத்தார். அதை இதுவரை யாரும் பயன்படுத்தவில்லை. இங்கு அற்புதம் நடைபெற பரிசுத்தமான இடம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. எலியா தீர்க்கத்தரிசி மகா பெரிய பரிசுத்தவான், அவர் தங்கி இருந்த இடத்திற்கு விதவையின் மரித்துப்போன மகனைக் கொண்டு போகிறார். அவர் படுத்த கட்டிலில் அவனைக் கிடத்துகிறார்.

ஜெபம் இல்லாமல் அற்புதம் இல்லை. எலியா ஜெபித்த ஜெபம் தேவனை அசைத்தது எலியா அந்த ஸ்திரீ செய்த உதவியை நன்றியுடன் ஜெபத்தில் கூறுகிறார். பையன் மரித்து வீட்டான். அந்தத் தாயின் துக்கத்தை ஆண்டவரிடம் முறையிடுகிறார். பிள்ளையின் மேல் மூன்றுதரம் குப்புற விழுந்து - எலியாவின் உடல், அந்தப் பையனின் கண்ணோடு கண், வாயோடு வாய், கையோடு கைகள், காலோடு கால் ஒட்டியிருக்கும் வகையில் அந்தச் சின்னப் பையன் உடலளவுக்குத் தன் உடலைக் குறுக்கினார்.

இந்தப் பிள்ளையின் ஆத்துமா இவனுக்குள் திரும்பி வரப் பண்ணும் என்று ஆதங்கத்தோடு ஆண்டவரிடம் விண்ணப்பிக்கிறார்,

கர்த்தர் எலியாவின் சத்தத்தைக் கேட்டார்; பிள்ளையினுடைய ஆத்துமா அவனுள் திரும்பி வந்தது; அவன் பிழைத்தான்.

அது வரை மரித்த மனிதர் எவரும் எவராலும் உயிர் பிழைத்ததாக வரலாறு இல்லை.

அப்பொழுது எலியா பிள்ளையை எடுத்து, மேல்வீட்டிலிருந்து அவனைக் கீழ்வீட்டிற்குள் கொண்டுவந்து, அவனை அவன் தாயினிடத்தில் கொடுத்து: பார் உன் பிள்ளை உயிரோடிருக்கிறான் என்று சொன்னான்.

அப்பொழுது அந்த ஸ்திரீ எலியாவை நோக்கி: நீர் தேவனுடைய மனுஷன் என்றும், உம்முடைய வாயிலிருந்து பிறக்கும் கர்த்தரின் வார்த்தை உண்மை என்றும், இதினால் இப்போது அறிந்திருக்கிறேன் என்றாள்.

விதவைக்கு ஒரே மகன். அவன் இறந்து போயிருந்தால் அவளது சந்ததியே அற்றுப் போயிருக்கும். எலியாவின் விசுவாசத் துணிச்சல் பரலோகத்தைச் செயல்பட வைத்தது.



முன்னுரை அணிந்துரை ஆசிரியர் உரை-1 மாவும் எண்ணெய்யும்
பெருகியது
விதவையின் மகன்
உயிர் பெற்றது

ஆகாபும் எலியாவும் எலியாவும் காகங்களும் அக்கினியால் அற்புதம் ஆகாப்-யேசபேலும்
எலியாவும்
சுழல் காற்றில் எலியா
பரலோகம் சென்றது

ஆசிரியர் உரை-2 எங்கள் வாழ்வில்
அற்புதங்கள்
நன்றியுரை


Go to top