1 இராஜா. 17:1-7

கீலேயாத்தின் குடிகளிலே திஸ்பியனாகிய எலியா ஆகாபை நோக்கி: என் வாக்கின்படியே அன்றி இந்த வருஷங்களிலே பனியும் மழையும் பெய்யாதிருக்கும் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக நிற்கிற நான் அவருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

பின்பு கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாயிற்று, அவர்:

நீ இவ்விடத்தை விட்டுக் கீழ்த்திசையை நோக்கிப் போய், யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையில் ஒளித்துக்கொண்டிரு.

அந்த ஆற்றின் தண்ணீரைக் குடிப்பாய்; அங்கே உன்னைப் போஷிக்க, காகங்களுக்குக் கட்டளையிடுவேன் என்றார்.

அவன் போய், கர்த்தருடைய வார்த்தையின்படியே யோர்தானுக்கு நேராயிருக்கிற கேரீத் ஆற்றண்டையிலே தங்கியிருந்தான்.

காகங்கள் அவனுக்கு விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டுவந்தது; தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரைக் குடித்தான்.

காகங்கள் கொண்டு வந்த உணவைப் பின்பற்றி எந்த ஒற்றர்களாலும் எலியாவை நெருங்க முடியவில்லை. கேரீத் ஆற்றண்டையில் எலியா இருந்ததால், காகங்களால் சரியாக எலியாவிடம் வந்தடைய முடிந்தது. அதுபோலத்தான் நாம் எங்கே இருக்க வேண்டும் என்று தேவன் கட்டளையிடுகிறாரோ, அங்கே நாம் இருந்தால் தேவ ஆசீர்வாதங்கள் நம்மைச் சரியாக வந்தடைய வசதியாக இருக்கும்.

அநேக வருடங்களுக்கு முன்பு 'காக்காவும் நரியும்' என்று ஒரு கதை சொல்வார்கள். ஒரு பாட்டி வடை சுட்டுக் கொண்டிருப்பாள். ஒரு காக்கா, பாட்டி சுட்டு வைத்திருக்கும் வடைகளில் இருந்து ஒரு வடையைத் தூக்கிக் கொண்டு போய் அருகில் இருந்த ஒரு மரத்தின் கிளையின் மேல் உட்கார்ந்துவிடும். அப்பொழுது அங்கு வந்த ஒரு நரி காக்காவை ஏமாற்றி வடையை எடுத்துக் கொண்டு ஓடிவிடும். பின் கதை மாறியது. பாட்டி வடை சுடுவது, காக்கா தூக்கிக் கொண்டு போவது எல்லாம் அதேதான். நரி காக்காவைப் பார்த்து, ‘நீ ரொம்ப அழகாய் இருக்கிறாய். உன்குரல் இனிமையாய் இருக்கிறது. நீ ஒரு பாட்டுப்பாடு’ என்று கேட்கும். காக்கா வாயில் இருந்த வடையைத் தன் காலின் கீழ் வைத்துத் கொண்டு 'கா கா' 'என்று கத்தும். நரி ஏமாந்து போகும்.

காகம் அங்குமிங்கும் பறந்து இரையைத் தேடி எடுக்கும். இது எடுப்பதைத் தவிர யாருக்கும் எதுவும் கொடுக்காது, இஸ்ரவேலருக்கோ மழை பெய்யாததால் பஞ்சம். பாட்டியாவது வடை சுடுவதாவது: பின்பு காகங்கள் விடியற்காலத்தில் அப்பமும் இறைச்சியும், சாயங்காலத்தில் அப்பமும் இறைச்சியும் கொண்டு வந்தது எப்படி?

அந்தப் பஞ்ச காலத்தில் அரண்மனையில்தான் அப்பமும், இறைச்சியும் காகங்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். காகங்கள் அவற்றை எடுத்துப் போகும் போது யாரும் பார்க்காமல் இருக்க, அங்கிருக்கும் வேலைக்காரர்களின் கண்கள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகாப் இராஜா, எலியாவைச் சங்கரிக்க தேடிக் கொண்டிருந்தபோது. அவன் அரமனைமியிருந்தே எலியாவை போஷிப்பதற்காக அப்பமும் இறைச்சியும் போயிருக்கிறது.

‘… பட்சிக்கிறவனிடத்திலிருந்து பட்சணமும், பலவானிடத்திலிருந்து மதுரமும் வந்தது …’ (நியா. 14:14).

எலியா தாகத்திற்கு கேரீத் ஆற்றின் தண்ணீரைக் குடித்தான். ‘கேரீத்’ என்ற வார்த்தைக்கு வறட்சி என்று பொருள், இஸ்ரவேல் தேசத்தைப் பாதித்த நியாயத்தீர்ப்பு, தீர்க்கத்தரிசி எலியாவையும் பாதித்தது. ஆனால் எப்போது ஆறு வற்றிதோ, அப்பொழுது இன்னொரு கதவு திறக்கப்பட்டது.

இருண்டு நிற்கும் நிலை உண்டாகும் போது துவண்டு விடாதீர்கள். உங்களுக்கு வேண்டிய அப்பம், இறைச்சி போன்ற ஆசிர்வாதங்கள் தேவனிடமிருந்து கிடைக்கும்.



முன்னுரை அணிந்துரை ஆசிரியர் உரை-1 மாவும் எண்ணெய்யும்
பெருகியது
விதவையின் மகன்
உயிர் பெற்றது

ஆகாபும் எலியாவும் எலியாவும் காகங்களும் அக்கினியால் அற்புதம் ஆகாப்-யேசபேலும்
எலியாவும்
சுழல் காற்றில் எலியா
பரலோகம் சென்றது

ஆசிரியர் உரை-2 எங்கள் வாழ்வில்
அற்புதங்கள்
நன்றியுரை


Go to top