கீலேயாத் என்பது யோர்தானின் கிழக்குப் பகுதியிலிருந்த ஒரு காட்டுப் பகுதி. அங்கு வாழ்ந்த இரண்டரைக் கோத்திரத்திலிருந்து தோன்றியவர் எலியா. 'திஸ்பி' என்றால் மனந்திரும்பச் செய்பவர் என்று பொருள்.
தேவ சமூகத்தில் நின்று, தேசத்தின் அருவருப்புகளால் நொந்து, வேதனைப்பட்டு, ஒரு புயலாக உருவாகி, தேசத்தின் அரியணையை அசைக்கும்படி அவர் புறப்பட்டு வந்தார். அவரது வார்த்தை அழுத்தமானது. அவர் தேவசித்தம் அறிந்து ஊக்கமாய் வேண்டிக் கொண்டு, ஒரு போருக்குக் களமிறங்கி இருந்தார். (யாக். 5:17-18) அவரது போர்க் காலங்களில் தேவன் அற்புதக் காரியங்களைச் செய்தார்.
தனது உயிரையும் பணயம் வைத்து, ஆன்மீகப் புரட்சி ஒன்றுக்கு ஆயத்தமாகி அவர் இருந்தார். தேவனோடு தனித்து உறவாடிய அவரின் தவ வாழ்வு தேசத்தை அசைக்கும் வலிமை மிக்க சொற்களில் வெளிப்படையாகியது. அந்த ஜீவனுள்ள தேவனின் ஊழியர் விக்கிரக அரசனின் வாளுக்குப் பயப்படவில்லை. இவரது சொல் வாளை வெல்ல, ஆகாபின் இரும்பு வாள் திகைத்து நின்றது.
மயிர் உடை தரித்து, இடையில் வார்க்கச்சை கட்டிக் கொண்டிருந்த எலியா, புயலென வந்தவர். இதோ சுழல் காற்றில் ஏறிப் போகிறார். (2 இராஜா. 2:1). அக்கினியாக வாழ்ந்து, வான அக்கினியை இறக்கியவர் அக்கினி இரதம் ஏறிப் பயணமாகிறார். (2 இராஜா. 2:11). தேவன் தமது பணியாளர்களுக்கு, அவரவர் பணிகளுக்கேற்ப கனமளிக்கிறார்.
வானத்துக்கு அவர் எடுக்கப்படும் நாளில் ஒரு நீண்ட தூரப் பயணத்தை அவர் மேற்கொள்ள விரும்பினார். இஸ்ரவேலை அசைத்த தீர்க்கத்தரிசியின் சுவடுகள் இதோ தங்கள் இறுதிப் பயணத்தை மேற்கொள்ளுகின்றன.
முதலில் கில்கால்… பின்பு பெத்தேல்… அதன் பின்பு எரிகோ… இறுதியில் யோர்தானின் மறுபக்கம்…
(2 இராஜா. 2:8) எலியா சால்வையை எடுத்து முறுக்கித் தண்ணீரை அடித்தார். அது இருபக்கமாகப் பிரிந்தது. அற்புதம். எலியாவும், எலிசாவும் உலர்ந்த தரை வழியாய் அக்கரைக்குப் போனார்கள். யோர்தானின் கிழக்குப் பக்கம் அந்தக் கிலேயாத்தின் திஸ்பியன் வந்து நிற்க, அங்கே அக்கினி இரதங்களும் குதிரைகளும் வந்தன. சிறப்பான பணியை முடித்து வானுக்குச் சிறகடித்தார். இடமும், சூழலும், பரம்பரையும் முக்கியம் அல்ல. இறைவனுக்கு அர்ப்பணம் செய்வதே முக்கியம்.
இஸ்ரவேவில் ஆன்மீக வாழ்வுகள் வறண்டு கிடந்த காலத்தில், ஆன்மீகக் கானானின் செழிப்பில் வாழ்ந்த எலியா பரலோக வாசலின் சிறப்பு வரவேற்புக்கு உரியவரானார். தடுத்துப் பாய்ந்த யோர்தானைக் கூட உடைத்துப் பயணித்தது அவர் பாதங்கள், கரை புரண்டு ஓடும் ஆறு கூட அவரைத் தடை செய்ய முடியவில்லை.
இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரைவீரருமாய் இருந்தவர் பரலோக் குதிரை பூட்டிய இரதத்தில் பயணமானார். இஸ்ரவேலின் வீதியெங்கும் அக்கினிச் சுவடுகளைப் பதித்த அந்த அக்கினிக்குப் பரலோக அக்கினிக் குதிரை தகுந்ததே, தேவனின் அக்கினி இரதமாக வலம் வந்தவருக்கு அக்கினி இரதம் பொருத்தமானதே.
உடலுடன் பரலோகம் சென்ற இரண்டாம் நபர் எலியா. முதலில் சென்றவர் ஏனோக்கு.
விசுவாசத்தினாலே ஏனோக்கு மரணத்தைக் காணாதபடிக்கு எடுத்துக்கொள்ளப்பட்டான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டபடியினாலே, அவன் காணப்படாமற்போனான்; அவன் தேவனுக்குப் பிரியமானவனென்று அவன் எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன்னமே சாட்சிபெற்றான். (எபி. 11:5) |
எலியாவும் தேவனுக்குப் பிரியமானவன். (2 இராஜா. 2:11). எலியா சுழல் காற்றிலே பரலோகத்திற்கு ஏறிப் போனான். அற்புதம். பரலோகம் ஒரு உண்மையான இடம்.
ஆதாமின் பாவத்தால் இப்பூமி சாபத்திற்குள்ளானது. இது இனி அக்கினியால் தூய்மையாக்கப்படும். (2 பேது. 3:10_13) அப்போது தற்கால வானம், பூமி அழியும். (எபி. 1:10_12) அதன் பின்பு புதிய வானமும் புதிய பூமியும் படைக்கப்படும். அந்தப் புதிய பூமி நித்திய பூமியாகும். மறுரூபம் பெற்றவர்களாக அன்று உயிரோடிருக்கும் மக்கள் அந்த பூமியில் குடியேற்றப்படுவர். (ஏசா. 66:22) அப்போது முற்காலப் பரிசுத்தவான்களும், சபையும் புதிய எருசலேமில் வசிப்பர். (கொலொ. 3:4) அதற்காகத்தான் நாம் காத்துக் கொண்டிருக்கிறோம்.
![]() |
![]() |
![]() |
முன்னுரை | ![]() |
அணிந்துரை | ![]() |
ஆசிரியர் உரை-1 | ![]() |
மாவும் எண்ணெய்யும் பெருகியது | ![]() |
விதவையின் மகன் உயிர் பெற்றது |
ஆகாபும் எலியாவும் | ![]() |
எலியாவும் காகங்களும் | ![]() |
அக்கினியால் அற்புதம் | ![]() |
ஆகாப்-யேசபேலும் எலியாவும் | ![]() |
சுழல் காற்றில் எலியா பரலோகம் சென்றது |
ஆசிரியர் உரை-2 | ![]() |
எங்கள் வாழ்வில் அற்புதங்கள் | ![]() |
நன்றியுரை |