1 இராஜா. 18:19-26
அப்படியே ஆகாப் இஸ்ரவேல் புத்திரர் எல்லாரிடத்திலும் ஆட்களை அனுப்பி, கர்மேல் பர்வதத்திலே அந்தத் தீர்க்கத்தரிசிகளைக் கூடிவரும்படி செய்தான்.
அப்பொழுது எலியா, சகல ஜனத்தண்டைக்கும் வந்து, ‘நீங்கள் எந்த மட்டும் இரண்டு நினைவுகளால் குந்திக் குந்தி நடப்பீர்கள். கர்த்தர் தெய்வமானால் அவரைப் பின்பற்றுங்கள். பாகால் தெய்வமானால் அவனைப் பின்பற்றுங்கள்’ என்றான். ஜனங்கள் பிரதியுத்திரமாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
அப்பொழுது எலியா ஜனங்களை நோக்கி, ‘கர்த்தரின் தீர்க்கத்தரிசிகளில் மீந்திருக்கிறவன் நான் ஒருவனே. பாகாலின் தீர்க்கத்தரிசிகளோ நானூற்றைம்பது பேர்.
‘இப்போதும் இரண்டு காளைகளை எங்களிடத்தில் கொண்டு வரட்டும். ஒரு காளையை அவர்கள் தெரிந்து கொண்டு, அதைச் சந்து சந்தாகத் துண்டித்து நெருப்புப் போடாமல் விறகுகளின் மேல் வைக்கக்கடவர்கள். நான் மற்ற காளையை அப்படியே செய்து, நெருப்புப் போடாமல் விறகுகளின் மேல் வைப்பேன்.
‘நீங்கள் உங்கள் தேவனின் நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள். நான் கர்த்தருடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுவேன். அப்பொழுது அக்கினியால் உத்தரவு அருளும் தெய்வமே தெய்வம்’ என்றான். அதற்கு ஜனங்கள் எல்லாரும் ‘இது நல்ல வார்த்தை’ என்றார்கள்.
அப்பொழுது எலியா பாகாலின் தீர்க்கத்தரிசிகளை நோக்கி, ‘நீங்கள் அநேகரானதால் நீங்களே முந்தி ஒரு காளையைத் தெரிந்து கொண்டு, அதை ஆயத்தம் பண்ணி, நெருப்புப் போடாமல் உங்கள் தேவனுடைய நாமத்தைச் சொல்லிக் கூப்பிடுங்கள்’ என்றான்.
1 இராஜா. 18:28-29
அவர்கள் உரத்தசத்தமாய்க் கூப்பிட்டு, தங்கள் வழக்கத்தின்படியே இரத்தம் தங்கள்மேல் வடியுமட்டும் கத்திகளாலும் ஈட்டிகளாலும் தங்களைக் கீறிக்கொண்டார்கள்.
மத்தியானவேளை சென்றபின்பு, அந்திப்பலி செலுத்தும் நேரமட்டாகச் சன்னதம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்; ஆனாலும் ஒரு சத்தமும் பிறக்கவில்லை, மறுஉத்தரவு கொடுப்பாரும் இல்லை, கவனிப்பாரும் இல்லை.
அக்கினியில் உண்மையான தேவன் இருக்கிறார்.
1 இராஜா. 18:30-39
அப்பொழுது எலியா சகல ஜனங்களையும் நோக்கி: என் கிட்டே வாருங்கள் என்றான்; சகல ஜனங்களும் அவன் கிட்டே வந்தபோது, தகர்க்கப்பட்ட கர்த்தருடைய பலிபீடத்தை அவன் செப்பனிட்டு:
உனக்கு இஸ்ரவேல் என்னும் பேர் இருப்பதாக என்று சொல்லி, கர்த்தருடைய வார்த்தையைப்பெற்ற யாக்கோபுடைய குமாரரால் உண்டான கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே, பன்னிரண்டு கற்களை எடுத்து,
அந்தக் கற்களாலே கர்த்தருடைய நாமத்திற்கென்று ஒரு பலிபீடத்தைக் கட்டி, பலிபீடத்தைச் சுற்றிலும் தானியம் அளக்கிற இரண்டுபடி விதை விதைக்கத்தக்க இடமான ஒரு வாய்க்காலை உண்டாக்கி,
விறகுகளை அடுக்கி, ஒரு காளையைச் சந்துசந்தாகத் துண்டித்து விறகுகளின்மேல் வைத்தான்.
பிற்பாடு அவன்: நீங்கள் நாலுகுடம் தண்ணீர் கொண்டுவந்து, சர்வாங்க தகனபலியின்மேலும், விறகுகளின்மேலும் ஊற்றுங்கள் என்றான்; பின்பு இரண்டாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; இரண்டாந்தரமும் ஊற்றினார்கள்; அதற்குப்பின்பு மூன்றாந்தரமும் அப்படியே ஊற்றுங்கள் என்றான்; மூன்றாந்தரமும் ஊற்றினார்கள்.
அப்பொழுது தண்ணீர் பலிபீடத்தைச் சுற்றிலும் ஓடினது; வாய்க்காலையும் தண்ணீரால் நிரப்பினான்.
அந்திப்பலி செலுத்தும் நேரத்திலே, தீர்க்கதரிசியாகிய எலியா வந்து: ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தேவனாகிய கர்த்தாவே, இஸ்ரவேலிலே நீர் தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், நான் இந்தக் காரியங்களையெல்லாம் உம்முடைய வார்த்தையின்படி செய்தேன் என்றும் இன்றைக்கு விளங்கப்பண்ணும்.
கர்த்தாவே, நீர் தேவனாகிய கர்த்தர் என்றும், தேவரீர் தங்கள் இருதயத்தை மறுபடியும் திருப்பினீர் என்றும் இந்த ஜனங்கள் அறியும்படிக்கு, என்னைக் கேட்டருளும், என்னைக் கேட்டருளும் என்றான்.
அப்பொழுது: கர்த்தரிடத்தில் இருந்து அக்கினி இறங்கி, அந்தச் சர்வாங்க தகனபலியையும், விறகுகளையும், கற்களையும், மண்ணையும் பட்சித்து, வாய்க்காலிலிருந்த தண்ணீரையும் நக்கிப்போட்டது.
ஜனங்களெல்லாரும் இதைக் கண்டபோது, முகங்குப்புற விழுந்து: கர்த்தரே தெய்வம், கர்த்தரே தெய்வம் என்றார்கள்.
![]() |
![]() |
![]() |
முன்னுரை | ![]() |
அணிந்துரை | ![]() |
ஆசிரியர் உரை-1 | ![]() |
மாவும் எண்ணெய்யும் பெருகியது | ![]() |
விதவையின் மகன் உயிர் பெற்றது |
ஆகாபும் எலியாவும் | ![]() |
எலியாவும் காகங்களும் | ![]() |
அக்கினியால் அற்புதம் | ![]() |
ஆகாப்-யேசபேலும் எலியாவும் | ![]() |
சுழல் காற்றில் எலியா பரலோகம் சென்றது |
ஆசிரியர் உரை-2 | ![]() |
எங்கள் வாழ்வில் அற்புதங்கள் | ![]() |
நன்றியுரை |